1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. smart meter tender by EB department

3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய புதிய டெண்டர்..மின்சார வாரியம் தகவல்..!

ஸ்மார்ட்மீட்டர்
தமிழகத்தில் ஒரே கட்டமாக மூன்று கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கு  புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும் அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் மின் கணக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் கூட இது ஒரு வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக  3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கு புதிய டெண்டர் கோரியது மின்சார வாரியம்
 
தமிழகத்தில் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்தும் வகையில் ஒரே கட்டமாக ஸ்மார்ட் மீட்டர்களுக்கான டெண்டர் வெளியாகி உள்ளது. மேலும் வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு..!