வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (11:42 IST)

அமித்ஷா நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: மின்சார வாரியம் உத்தரவு..!

இன்று மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வர இருக்கும் நிலையில் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலையின் நடைப்பயணத்தை தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து அவர் வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள உள்ளார். 
 
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மின்சார பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது மின்தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran