1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (15:35 IST)

400 ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய்: தஞ்சை மக்கள் அதிர்ச்சி..!

EB reading
தஞ்சையில் 400 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவருக்கு 5000 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 கடந்த பல ஆண்டுகளாக 400 ரூபாய் மட்டுமே இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தியவர்களுக்கு 5000 ரூபாய் மின் கட்டணமும் ஒரு சில வீடுகளில் 15 ஆயிரம் ரூபாய் மின் கட்டணமும் வந்துள்ளது. 
 
இதனை அடுத்து மின் கணக்கீட்டு அதிகாரிகள் முறையாக மின்கணக்கீடு செய்யவில்லை என்று மின் சார வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறிய நிலையில் அவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 
 
தஞ்சை மாவட்டம் குருவிக்கரம்பை  என்ற கிராமத்தில் தான் மின் கட்டணம் அதிக அளவில் வந்திருப்பதால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran