1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sivasankar baba sent to jail for 15 days

சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

சிவசங்கர் பாபா
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து நேற்று டெல்லியில் அவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டர். இதனை அடுத்து நேற்று இரவு சென்னை அழைத்து வரப்பட்டார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை  சற்று முன்னர் சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனையடுத்து பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
 
இதனையடுத்து அவர் சிறையில் சற்றுமுன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த மனு தாக்கல் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தற்கொலை மிரட்டல் விடுத்த மீராமிதுனுக்கு போலீஸார் அறிவுரை!