வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (17:52 IST)

பிரதமருடனான சந்திப்பு மகிழ்வு, மன நிறைவை தருகிறது: முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடியை சற்றுமுன் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்த நிலையில் பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியையும் மன மகிழ்வையும் மன நிறைவையும் தருகிறது என முதல்வர் கூறியுள்ளார் 
 
பிரதமரின் சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமருடனான சந்திப்பு மனமகிழ்வு மனநிறைவை தருகிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற அதற்காக தனது வாழ்த்துக்களை பிரதமர் என்னிடம் தெரிவித்தார் என்றும் கூறினார் 
 
மேலும் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார் என்றும் எந்த நேரத்திலும் என்னை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார் 
 
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற பிரதமர் மோடியுடன் வலியுறுத்தினேன் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் நான் கேட்டுக் கொண்டேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் கோரிக்கை விடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்