சிவசங்கர் பாபாவின் இ-மெயிலை முடக்கியது சிபிசிஐடி!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக இன்று சிவசங்கர் பாபாவுடன் சென்று அப்பள்ளியை சோதனை செய்த போலீசார் பென் ட்ரைவ், லேப்டாப் உள்பட பல முக்கிய பொருட்களை கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஏராளமான ஆதாரங்கள் சிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சிவசங்கர் பாபா பயன்படுத்திய யாஹூ இமெயிலை தற்போது போலீசார் முடக்கி உள்ளனர். மேலும் அந்த மெயிலில் ஏராளமான ஆபாச புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் சாட் செய்த ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
சிபிசிஐடி போலீஸார் பாபாவின் இமெயிலை முடக்கியதை அடுத்து அந்த மெயிலில் உள்ள விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது