புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 ஜூன் 2021 (08:32 IST)

தந்தை கடனுக்காக மகனின் வங்கிக்கணக்கு முடக்கம்: பரிதாபமாக பலியான உயிர்!

தந்தை கடனுக்காக மகனின் வங்கிக்கணக்கு முடக்கம்: பரிதாபமாக பலியான உயிர்!
தந்தை பெற்ற கடனுக்காக மகனின் வங்கி கணக்கை முடக்கிய வங்கி அதிகாரிகளால் பரிதாபமாக ஒரு உயிர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பல்லடம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் தந்தை விவசாய கடனாக ஒன்றரை லட்ச ரூபாய் வாங்கி உள்ளார். ஆனால் அவர் அந்த கடனை கட்டவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் தந்தையின் கடனுக்காக அவரது மகன் கனகராஜ் வங்கி கணக்கை வங்கி அதிகாரிகள் முடக்கியுள்ளனர் இந்த நிலையில் கனகராஜ் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை செலவுக்காக வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க அவரது மனைவி சென்ற போதுதான் அவரது கணக்கு வாங்கி அதிகாரிகளால் முடக்கப்பட்டிருந்தது தெரிந்தது 
இதனை அடுத்து அவர் வங்கி அதிகாரிகளிடம் கனகராஜ் கணக்கை விடுவிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் தந்தை பெற்ற கட னுக்காக அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்ததால் அவரால் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாமல் திரும்பினார். இந்த நிலையில் சிகிச்சை அளிக்காததால் கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார் 
 
இதனை அடுத்து கனகராஜ் மனைவி தற்போது இரண்டு மகள்களுடன் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி கணக்கில் ஒன்றரை லட்சம் ரூபாய் இருந்தும் அந்த பணத்தை எடுக்க முடியாத காரணத்தினால் கனகராஜ் பரிதாபமாக இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனகராஜன் மரணத்திற்கு வங்கி அதிகாரிகள் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் சுற்றுவட்டார விவசாயிகள் திரண்டு தங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்