வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (12:59 IST)

சிவசங்கர் பாபா டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை வட்டாரத்தகவல்!

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து நேற்று டெல்லியில் அவர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டர். நேற்று சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனையடுத்து பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர் சிறையில் சற்றுமுன் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு ஜூன் 18 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு செங்கல்பட்டிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சையில் தேறியுள்ள அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து இன்றோ அல்லது நாளையோ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது.