1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (20:09 IST)

மதுரைக்கு செல்லும் பேருந்துகள் ரத்து: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதை அடுத்து இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மதுரையில் முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவாரூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அங்குள்ள நிபந்தனைகள் மதுரைக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து மதுரையில் அரசு பேருந்துகள் ஓடாது என்றும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் மதுரை ஆட்சித்தலைவர் சற்றுமுன் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரைக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது
 
இதன்படி சிவகங்கை காரைக்குடி தேவகோட்டை ஆகிய நகரில் இருந்து மதுரைக்கு செல்லும் பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது