திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (12:59 IST)

சீன தாயாரிப்பு பொருட்கள் வீதியில் உடைப்பு !

சில நாட்களுக்கு லடாக் எல்லைப்  பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலை கண்டித்து மதுரையில், தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் கட்டபொம்மன் சிலைக்கு அருகே சீன பொருட்களை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

தென்னிந்திய ஃபார்வேர்ட் கட்சி சார்பில் மதுரை கட்டபொம்மன் சிலை அருகே சீன பொருட்களை உடைக்கும் போராட்டம் நடைபெறுக்கிறது. இதில், சீன நாட்டில் உற்பத்தியான எல்.இ.டி டிவிகளை போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.