தொடர்புடைய செய்திகள்
- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேருக்கு கொரோனா! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- 92 லட்சத்தை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: 5 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்
- கொரோனா வைரஸ்: தென் கொரியாவை அச்சுறுத்தும் இரண்டாம் அலை நோய்த்தொற்று
- கொரோனா வலுவிழந்துவிட்டது, மருந்து இல்லாமலேயே காணாமல் போகும்: பிரபல விஞ்ஞானி
- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை: ரிசல்ட் என்ன?
தமிழகம் முழுவதும் அமலாகிறதா முழு ஊரடங்கு? – நாளை ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதிக பாதிப்பு உள்ள பகுதிகளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மதுரையிலும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் இன்று முதல் மதுரையிலும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஜூன் 30 வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்நிலையில் இதுதவிர வேலூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதில் மாவட்ட நிலவரங்கள் குறித்து ஆராய்ந்து பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துவது அல்லது தமிழகம் முழுவதிலுமே ஒரு வார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
