1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (06:49 IST)

மதுரை செல்லும் அனைத்து விமானங்களும் திடீர் ரத்து: பரபரப்பு தகவல்

மதுரை செல்லும் அனைத்து விமானங்களும் திடீர் ரத்து
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருப்பதன் காரணமாக ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. எனவே இந்த நான்கு மாவட்டங்களில் அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை திறந்திருக்கும் என்பதும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் செல்ல அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த நான்கு மாவட்டங்களில் தவிர வேறு சில மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இன்னும் ஒரு சில மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது. அந்தவகையில் நேற்று மாலை தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில், மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடைபிடிக்கப்படும் நிபந்தனைகள் மதுரைக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து நாளை முதல் சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மதுரை மட்டுமன்றி தூத்துக்குடி மற்றும் திருச்சி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் முன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது