தொடர்புடைய செய்திகள்
- அதிமுக சசிகலாவிடம்.. ரஜினி பாஜகவிடம்..! – கார்த்திக் சிதம்பரம் சொல்லும் சீக்ரெட்!
- அவங்க எல்லாம் ஊழல் கட்சி ஆயிட்டாங்க! – கூட்டணி கட்சியையும் அட்டாக் செய்த வானதி சீனிவாசன்!
- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முக ஸ்டாலின்!
- அதிமுக முதல்வர் வேட்பாளர் நிகழ்ச்சி: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- மருத்துவமனையில் ஸ்டாலின்; அதிர்ச்சியில் தொண்டர்கள்! – மு.க.ஸ்டாலின் விளக்கம்!
சிவகங்கை ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி
சிவகங்கை ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுகவின் வேட்பாளர் சரஸ்வதி குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று நடைபெற்ற சிவகங்கை ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி இருந்தது. இந்த நிலையில் பதிவான வாக்குகளை எண்ணியபோது அதிமுக திமுக வேட்பாளர்கள் சமமாக வாக்குகளை பெற்று இருந்ததால் குலுக்கல் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது
குலுக்கல் முறையிலான வெற்றிக்கு இருதரப்பிலும் ஒப்புக் கொண்டதை அடுத்து குலுக்கல் செய்யப்பட்டதில் அதிமுக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
அதிமுக வேட்பாளராக 8வது வார்டு உறுப்பினராக சரஸ்வதி வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கும் அவரது ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குலுக்கல் முறையில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் சோகத்துடன் அங்கிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
