வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (14:04 IST)

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முக ஸ்டாலின்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி களத்தில் இறங்கி பணி செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவிகள் புதல்விகள் வழங்கிக் கொண்டிருந்தபோது திடீரென குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது 
 
இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், தூக்கமின்மை காரணமாகத் தான் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக திமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர் 
 
இந்தநிலையில் முக ஸ்டாலின் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது நலமாக இருந்ததை அடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன