திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (16:51 IST)

முதல்வர் பற்றி அவதூறு பேசிய அரசியல்வாதிகள்! – வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பல்வேறு இடங்களில் அவதூறாக பேசியதாக சுப்பிரமணிய சுவாமி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் மீதான இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதல்வர் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வைப்பதற்கு அவதூறு வழக்கு தொடர முடியாது, அவரது பணிகள் குறித்து அவதூறாக பேசியிருந்தால் மட்டுமே வழக்கு தொடர முடியும் என கூறி வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்