1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Siva Shankar Baba teachers upscond

சம்மன் கொடுக்க சென்ற சிபிசிஐடி.. தப்பியோடிய சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் !

Siva Shankar Baba
சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவிற்கு உதவு செய்ததாக கூறப்படும் ஆசிரியைகள் தலைமறைவு. 

 
சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை சேர்ந்த மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காது என்பது ஒரு குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்கள் மீது தான் போக்சோ சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே, சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அதன்படி திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியது.
 
அதன்படி சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சிவசங்கர் பாபாவிற்கு உதவு செய்ததாக கூறப்படும் ஆசிரியைகள் தலைமறைவு ஆகியுள்ளனர். ஆம், வீட்டை பூட்டிக்கொண்டு தப்பியோடிய ஆசிரியைகள் 5 பேரும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழகத்திற்கு வரும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் !