1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:55 IST)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வியில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடுகளை காவல்துறையினர் விசாரிப்பதற்கு பதிலாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வியில் நடைபெற்ற முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டு உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சிபிசிஐடி இந்த முறைகேடுகளை விரைவில் விசாரித்து வழக்கை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது