1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (12:10 IST)

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கு சம்மன் தர முடிவு

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. 

 
சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை சேர்ந்த மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காது என்பது ஒரு குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்கள் மீது தான் போக்சோ சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே, சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அதன்படி திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.