எஸ்.ஐ பூமிநாதன் கொலை - மணிகண்டனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்
ஆடு திருடியவர்களைப் பிடிக்க சென்ற திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இக்கொலையில் முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்றக் காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி நாவல்பட்டு சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதாகியுள்ள மணிகண்டனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து கீரனூர் நீதிபதி உத்தரவிட்டுள்ள்ளார். .