1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 மார்ச் 2025 (18:16 IST)

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும் என்பதைக் கோரி, குடும்பத்துடன் குடிக்கும் போராட்டத்தை தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த பகுதி வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். 
 
மது குடித்துவிட்டு செல்லும் சிலர் ரகளையில் ஈடுபடுவதால், ஏற்கனவே புகாரும் எழுந்துள்ளது. இதனால், அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் எனக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. இதில் பேசிய பார்த்திபன், "டாஸ்மாக் கடையை மூடாவிட்டால், குடும்பத்தோடு குடிக்கும் போராட்டத்தை நடத்துவோம்" என்று கூறியுள்ளார். இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran