புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 20 நவம்பர் 2021 (07:35 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா: முதல்வர் கலந்து கொள்கிறார்

இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடதக்கது. இதனை அடுத்து சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நவம்பர் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது வாழ்த்துக்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .