1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. OPS condemned Govy for pongal price issue

இதற்கு பெயர் தான் "சொல்லாததையும் செய்வோம்" என்பதா!? – ஓபிஎஸ் அறிக்கை

Tamilnadu
பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் நிதி வழங்காமல் பொங்கல் பை மட்டும் வழங்குவது குறித்து ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பை மற்றும் பணம் வழங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் வரும் பொங்கலுக்கு வழங்க உள்ள பொங்கல் பையில் உள்ள பொருட்கள் குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பொங்கல் பணம் வழங்காதது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “"அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்" என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பொங்கல் நிதி உதவி வழங்குவதை கைவிட்டுவிட்டு, வெறும் பொங்கல் தொகுப்பினை மட்டும் அறிவித்து மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பெயர் தான் "சொல்லாததையும் செய்வோம்" என்பதா!?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பள்ளி பொது தேர்வில் மாற்றம் - தள்ளிப்போக வாய்ப்பு!