செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 நவம்பர் 2021 (08:26 IST)

திருட்டு கும்பலை துரத்திய எஸ்.ஐ வெட்டிக் கொலை! – புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை அருகே ஆடு திருடும் கும்பலை துரத்தி சென்ற சிறப்பு ஆய்வாளரை திருட்டு கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை அருகே கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றை விரட்டி சென்றுள்ளார்.

அப்போது அந்த திருட்டு கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதனால் பூமிநாதன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருச்சி சரக ஐஜி மற்றும் டிஐஜி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் திருட்டு கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.