வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (07:27 IST)

செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி முன்பாக இன்று மீண்டும் விசாரணை

செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு சென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
 இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு வழக்கு இன்று மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் அவர்கள் முன் விசாரணைக்கு வருகிறது. ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து இன்று விசாரணை நடைபெறும் என்றும் இன்றைய விசாரணைக்கு பின்னர் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அவர்கள் ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
Edited by Siva