வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (14:50 IST)

செந்தில் பாலாஜியின் முக்கிய பொறுப்பை முத்துசாமியிடம் ஒப்படைத்த முதல்வர்..!

muthusamy
ஏற்கனவே செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களை இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது செந்தில் பாலாஜி வகித்து வந்த மேலும் ஒரு முக்கிய பொறுப்பை அமைச்சர் முத்துசாமி வசம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். 
 
செந்தில் பாலாஜி கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
ஏற்கெனவே அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த டாஸ்மாக் நிர்வாக பணிகளை அமைச்சர் முத்துசாமி கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran