1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 8 ஜூலை 2023 (15:25 IST)

கோவிலில் தனிநபருக்கு வழங்கப்படும் முதல் மரியாதை: நீதிபதியின் அதிரடி கருத்து

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் தனி நபருக்கு சிறப்பு மரியாதை வழங்கக் கூடாது என்பதை உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவில் கோவில் நிர்வாக  நடைமுறையில் நீதிமன்றம்   தலையிட விரும்பவில்லை என்றும், தனிநபருக்கு வழங்கப்படும் முதல் மரியாதை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், பொது நலன் கருதி இந்த விஷயத்தை அறநிலையத்துறை தெளிவு படுத்த வேண்டும் என்றும் நீதிபதி  தெரிவித்துள்ளார்.
 
மேலும் கோவிலுக்கு நன்கொடை கொடுப்பவர்களுக்கு சிறப்பு மரியாதை வேண்டுமா? வேண்டாமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சிவகங்கையைச் சேர்ந்த சின்னன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran