திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (10:24 IST)

செந்தில் பாலாஜி என்ன புத்தரா? உத்தமரா? அண்ணாமலை கேள்வி..!

செந்தில் பாலாஜி என்ன புத்தரா? அல்லது உத்தமரா? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜி கூறிய போது ’செந்தில் பாலாஜியை புத்தராகவும் உத்தமராகவும் திமுகவினர் சித்தரிக்கின்றனர் என்றும் தங்கள் தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக காட்ட திமுகவினர் முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
 
திமுக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டு விட்டு ஆளுநரை சீண்டி பார்க்கிறது என்றும் ஆளுநரை ஒருமையில் பேசி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருவது மிகவும் தவறானது என்றும் கூறினார் 
 
தமிழகத்திற்கு தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லை என்றும் தமிழக அரசு கூறுவதை ஆளுநர் அப்படியே ஒப்பிக்க வேண்டுமா என்றும் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று நானே சொல்லி இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran