1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. fire accident in chennai forum mall

சென்னை ஃபோரம் மாலில் தீ விபத்து!.. உள்ளே இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.!...

forum
சென்னையில் நிறைய இடங்களில் பெரிய பெரிய மால்கள் இருக்கின்றன. அங்கு தியேட்டர்கள், உணவகங்கள், காபி ஷாப், பீசா ஷாப், ஸ்னாக்ஸ் கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், துணிக்கடைகள், டாட்டு போடும் கடைகள் என பல கடைகள் இருக்கின்றன. சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் சென்று அங்கே நேரம் செலவழிப்பதுண்டு. ஏனெனில் ஒரே இடத்தில் எல்லாம் கிடைக்கும் என்பதால் பலரும் பொழுதுபோக்காக செல்கிறார்கள்..

அப்படி சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது ஃபோரம் மால். இங்கு உணவகங்ள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல கடைகள்  செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் ஃபோரம் மாலில் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரியப்பட்டது.

அவர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ஃபோரம் மாலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டிருக்கிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அவமரியாதை எப்போதும் ஏற்கமுடியாது... நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திரிஷா...