வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 பிப்ரவரி 2026 (17:57 IST)

நீங்கள் நடத்துவது கட்சி இல்லை.. வாட்சப் குழு!.. விஜயை விமர்சிக்கும் அதிமுக..

eps vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது திமுகவை அதிகமாக விமர்சித்தார்.. அதிமுகவை அங்கங்கே தொட்டு தொட்டு சென்றார்..

அரசிலுக்கு வர எனக்கு அனுபவம் இல்லை என சொல்கிறார்கள். கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக சரணடைவது.. மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எங்களுக்கு இல்லை.. கட்சி ஆரம்பித்த அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை மறந்தது.. கட்சியை வளர்த்த ஜெயலலிதா மேடத்தை மறந்தது.. அவர்கள் பேசியதையும், பின்பற்ற வேண்டும் எனக் கூறிய அனைத்தும் நீங்கள் மறந்து விட்டீர்கள் என்று அதிமுகவை விமர்சனம் செய்தார்.. மேலும், ‘என்னைப்போல் தனியாக கட்சி துவங்கி ஒரு சதவீத வாக்குகளை நீங்கள் வாங்க முடியுமா?’ எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் விஜய்க்கு அதிமுக பதிலடி கொடுத்திருக்கிறது. ‘கோவில் வாசலில் உடைக்கப்படும் தேங்காய் செல்களை பொறுக்கி எடுப்பதுபோல மற்ற கட்சிகளில் இருந்து தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் ஒரு whatsapp குழுவை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள் அடுத்த கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள் என்று சவால் விடுவது சிரிப்பாக உள்ளது..

நீங்க தனியாவாக வந்தீங்க பனையூர் பண்ணையாரே!..அப்பாவால் சினிமாவுக்கு வந்தவர் நீங்கள்.. ரஜினி ,விஜயகாந்தை பார்த்து காப்பி பேஸ்ட் செய்தீர்கள்.. அடுத்த கட்சி வரலாற்று தலைவர்களின் Legacy-ஐ விஜய் திருடி காபி பேஸ்ட்.. சொந்தமாக ஒருவரி பேசத் தெரியாத விஜய் அடுத்தவர்கள் வரலாற்றை பற்றி கேள்வி கேட்கலாமா?’ என அதிமுக விமர்சனம் செய்திருக்கிறது..