விஜய் ஒரு ஆளே இல்ல!.. தவெக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது!.. நயினார் நாகேந்திரன் ராக்ஸ்..
தலைவர் விஜய் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இன்று பேசினார்.. அப்போது வழக்கம் போல் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசினார், அப்போது பேசிய விஜய் தமிழகத்தில் தவெக 32 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறது. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்.. கண்டிப்பாக மாற்றம் வரும்.. நம்பிக்கையோடு இருங்கள் என்று பேசினார்.
ஏற்கனவே என்னை வெளியே வா என்கிறார்கள்.. தேர்தல் வரும்போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் விஜய் வந்து ஓட்டு போடுவார். ஒவ்வொரு வீட்டிலும் நமக்கு ஓட்டுகள் இருக்கிறது.. அவர்கள் திமுகவை தோற்கடிப்பார்கள். திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி என கூறினார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்தரனிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினார்கள் அதற்கு பதில் சொன்ன நயினார் நாகேந்திரன் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. எதார்த்தம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.. 32 சதவீத வாக்குகளை நான் வைத்திருக்கிறேன் என விஜய் எப்படி சொல்ல முடியும்?.. எந்த நம்பிக்கையில் சொல்கிறார்?
அவரை பார்க்க கூட்டம் கூடலாம். ஆனால் வாக்குகள் கிடைக்காது.. இதுவா தன்னம்பிக்கை?.. நான் ஆஞ்சநேயர் போல அந்த மலையை தாண்டுகிறேன் என்று சொல்கிறேன்.. அது தன்னம்பிக்கைதான்.. ஆனால் அது முடியுமா?.. நான் விஜய் ஒரு ஆளாகவே மதிக்கவில்லை. முதலில் அவர் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும்.. ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாது என அவர் கூறினார்..