1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:35 IST)

செந்தில் பாலாஜியை அடுத்து இந்த அமைச்சர் தான்.. அண்ணாமலை பேச்சு..!

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பொன்முடி ஆகியோர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர் என்பதும் இதில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அடுத்த அமைச்சர் யார் என்பது குறித்து தனது நடை பயணத்தின் போது அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது தமிழகத்தின் பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செந்தில் பாலாஜி பொன்முடி ஆகியோர்களின் வீடுகளில் சோதனை செய்தனர் 
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை அடுத்து அமைச்சர் மூர்த்தி தான் என தமிழகத்தில் நடை பயணம் செய்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது எல்லாம் சும்மாதான் அடுத்தது அமைச்சர் மூர்த்தி தான் எனக் கூறிய அண்ணாமலை என் குலதெய்வத்தின் மீது ஆணையாக எனக்கும் இதற்கும் சத்தியமாக எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 
 
தற்போது மதுரை மேலூரில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva