வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:41 IST)

கனிமொழி vs உதயநிதி: கொளுத்தி போட்ட செல்லூர் ராஜு

ஏற்கனவே, கனிமொழி தான் கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவதாகவும், முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எனவும் ஆதங்கப்பட்டு வரும் நிலையில் செல்லூர் ராஜூ புது செய்தியை உருவாக்கியுள்ளார். 
 
ஆம், அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, ஸ்டாலின் போகிற போக்கை பார்த்தால் கூடிய சீக்கிரம் தூக்கமில்லாமல் மன உளைச்சலில் தவிக்க போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
 
உதயநிதியை தனது வாரிசாக ஸ்டாலின் உருவாக்கிவிட்டார். ஆனால் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதிமுகவை அழிக்க ஒரு ஸ்டாலின் இல்லை... 100 ஸ்டாலின்கள் வந்தாலும் முடியாது. 
 
அவ்வளவு ஏன் அவர் மகன் உதயநிதி ஸ்டாலினும், அவர் பேரனும் வந்தால் கூட அதிமுகவை அழிக்க முடியாது. குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் திமுகவை மக்கள் என்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். 
 
கனிமொழியை ஸ்டாலின் பின்னுக்கு தள்ளி இருக்கிறாரோ இல்லையோ, உதயநிதியை முன்னிறுத்தப்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.