திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (18:25 IST)

திமுக எம்பி கனிமொழிக்கு விருது: ஸ்டாலின் வாழ்த்து

கடந்த பல ஆண்டுகளாக ராஜ்யசபா எம்பியாக இருந்து வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரி கனிமொழிக்கு இந்த ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்துள்ளது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கனிமொழிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா எம்பி கனிமொழி, ஆளும் பாஜக தலைவர்களுடனும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுடனும் நல்ல நட்புறவில் இருப்பதாக கூறப்படுவதுண்டு. அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தில் பெண்களுக்காக குரல் கொடுப்பதிலும் சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதிலும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அனைத்து கட்சி தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக கனிமொழி இருந்து வருகிறார்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுக்கு தேர்வு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சியின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்