கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரும் உதயநிதியின் 'கண்ணே கலைமானே'
கிறிஸ்துமஸ் விருந்தாக தனுஷின் 'மாரி 2', 'விஜய்சேதுபதியின் 'சீதக்காதி', சிவகார்த்திகேயனின் 'கனா', 'ஜெயம் ரவியின் 'அடங்கமறு' மற்றும் விஷ்ணுவின் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது தெரிந்ததே. இதில் 'சீதக்காதி' என்று வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் மேலும் ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக உதயநிதி நடித்த 'கண்ணே கலைமானே' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். வைரமுத்துவின் வைர வரிகளில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகிய 'எந்தன் கண்களை காணோம்' என்ற இந்த மெலடி பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.