திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (17:30 IST)

ஸ்டாலின் நல்லா இருந்தாதான் எங்களுக்கு வேலை: செல்லூர் ராஜூ

திமுக தலைவர் ஸ்டாலின் நலமுடன் இருந்தால்தான் அதிமுகவினர்களுக்கு வேலை அதிகமாக இருக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி வலிமையாக இருந்ததால் தான் அவரை எதிர்க்கட்சி தலைவராக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிராக அரசியல் செய்தனர். அதேபோல் ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன் வலிமையாக இருந்தால்தான் அதிமுகவினர்களாக எங்களுக்கு வேலை அதிகமாகும். எங்கள் கட்சியினர் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள்

ஆனால் போகிற போக்கை பார்த்தால் எங்களுக்கு அதிக வேலையை ஸ்டாலின் வைக்க மாட்டார் என்று தெரிகிறது. கூடிய விரைவில் அவர் தூக்கமிழந்து மன உளைச்சலால் பாதிக்கப்படுவார் என்று நினைக்கின்றேன்' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.,