கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல - பாமக குறித்து செல்லூரார்!

Sugapriya Prakash| Last Updated: புதன், 15 செப்டம்பர் 2021 (14:41 IST)
பாமகவிற்கு ஜெயகுமார் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. தமிழக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக, அதிமுகவை விமர்சித்தது. இதற்கு ஜெயகுமார் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதால் வருத்தம் இல்லை. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுப்படும்.
 
கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான். தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :