செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (12:06 IST)

பாமகவை தொடர்ந்து தேமுதிகவும் தனித்து போட்டி! – விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு!

தமிழக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக, உள்ளாட்சி தேர்தலை கூட்டணியின்றி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக அமமுகவுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த தேமுதிகவும் உள்ளாட்சி தேர்தலை தனித்து எதிர்கொள்வதாக தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தற்போது அறிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதால் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.