கூட்டணி தர்மத்தை காக்காத அதிமுக: ராமதாஸ் விமர்சனம்

Sugapriya Prakash| Last Modified புதன், 15 செப்டம்பர் 2021 (09:21 IST)
அதிமுகவோடு தற்போது கூட்டணி வைத்தாலும் உரிய இடம் கிடைக்காது என தனித்து போட்டியிடுவதாக ராமதாஸ் அறிவிப்பு.

 
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது, 
 
கடந்த தேர்தலின் போது கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்து வெற்றி பெற முடியுமா? அதிமுகவோடு தற்போது கூட்டணி வைத்தாலும் உரிய இடம் கிடைக்காது. 
 
எனவே, உள்ளட்ச்சி தேர்தலில் தனித்து நின்று குறிப்பிட்ட இடங்களை வென்று பாமக வாக்கு சதவிகிதத்தை நிரூபிப்போம் என ராமதாஸ் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :