வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (11:43 IST)

ரூ.2000 திரும்ப பெறுவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை.. செல்லூர் ராஜூ

2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். 
 
அதுமட்டுமின்றி பல அரசியல் கட்சி தலைவர்கள் இது குறித்து தங்களது கருத்தை தெரிவித்தார். இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்று முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு மூன்று மாத காலம் கால அவகாசம் கொடுத்துள்ளனர் என்றும் இதனால் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த முறை பண மதிப்பிழப்பு செய்த போது திடீர் என நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் தற்போது கால அவகாசம் வழங்கியதுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் 2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெறும் நடவடிக்கையை தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran