செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (11:29 IST)

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை: ரூ.15,000 கோடி ஒப்பந்தத்தை பெற்ற டாடா குழுமம்!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தருவதற்கான ஒப்பந்தத்தை டாடா குழுமம் ரூபாய் 15,000 கோடிக்கு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு 3ஜி இன்டர்நெட் சேவை மட்டுமே வழங்கி வருகிறது. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தந்து கொண்டிருக்கும் நிலையில் பிஎஸ்என்எல் விரைவில் 4ஜி சேவை தரும் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை உருவாக்க ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை டாடா குழுமம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. டாடா குழுமத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாகவும் விரைவில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran