வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 மே 2023 (07:41 IST)

2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம்.. பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்

2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என அரசு போக்குவரத்து கழக பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றாலும் 2000 ரூபாய் நோட்டை பதுக்கி வைத்திருந்த பணக்காரர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் டாஸ்மாக் உள்ளிட்ட ஒரு சில கடைகளில் 2000 ரூபாய் நோட்டு வாங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் பயணிகளிடமிருந்து 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டாம் என அரசு போக்குவரத்து கழக நடத்தினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டு வாங்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Siva