தொடர்புடைய செய்திகள்
- கோவில் நிதியை எடுத்து, வாகனங்கள் வாங்குவது விதி மீறல் - அண்ணாமலை
- கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துகள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி..!
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுவது எப்போது: அமைச்சர் சேகர் பாபு தகவல்..!
- பாஜக நியமிக்கும் ஆளுநர்கள் ஜனநாயகத்தை மிதிக்கிறார்கள்: ப.சிதம்பரம் காட்டம்
- ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல: ப சிதம்பரம்
ஆளுனர் என்ன ஆண்டவரா? அமைச்சர் சேகர் பாபு பதிலடி ..!
சிதம்பரம் தீட்சதர் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆளுநர் என்ன ஆண்டவரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிதம்பரம் தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஆளுநர் ரவி ஏன் கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார். தீட்சதர்களுக்கு என ஏதும் தனி சட்டம் உள்ளதா என கூறினார்.
மேலும் ஆளுநர் குறிப்பிடுவது போல சிறுமியர்களுக்கு இரட்டை விரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்
சிதம்பரம் தீட்சதர் விவகாரம் குறித்து சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஆளுநர் பேட்டி அளித்த நிலையில் அவருடைய கருத்துக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
