செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (13:05 IST)

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல: ப சிதம்பரம்

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல என்றும் எதிர் கட்சிகள் ஒற்றுமை தான் முதலில் முக்கியம் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார் 
 
ராகுல் காந்தி விவகாரம் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்திநிலையில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்த கட்சிகள் கூட தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றன
 
 இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை  சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல என்றும் எதிர் கட்சிகள் ஒற்றுமை தான் எங்களுக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். 
ராகுல் காந்தி கர்நாடகாவில் பேசியதற்கு சூரத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறினார். வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று மனுதாரர் தெரிவித்தும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது என்றும் மூன்று ஆண்டுகள் கிடப்பில் இருந்த ராகுல் வழக்கு 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
 
ராகுல் காந்தி தகுதி நீக்கத்தின் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran