1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 13 ஏப்ரல் 2023 (21:01 IST)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுவது எப்போது: அமைச்சர் சேகர் பாபு தகவல்..!

kilambakkam
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் பொழுது இந்த பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 
 
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கிளம்பும் வகையில் பிரம்மாண்டமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது என்பதும் இந்த பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும் என்றும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வரும் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva