1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 18 பிப்ரவரி 2021 (06:43 IST)

குஷ்புவின் கருத்துக்கு ஆதரவு அளித்த இயக்குனர் சீனுராமசாமி!

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அந்த கருத்தில் ’ஒரு தேசத்தை மோசமான நாடாக மாற்ற வேண்டும் என்றால் அணுகுண்டு போடவோ, ஏவுகணைகள் வீசத் தேவையில்லை. மாணவர்களின் தேர்வுகளின் தரத்தை குறைத்தாலே போதும்.
 
தேர்வுகளின் தரத்தை குறைத்தால் தரமற்ற டாக்டர்கள், இன்ஜினியர்கள், பொருளாதார நிபுணர்கள், நீதிபதிகள் ஆகியோர்கள் அந்த நாட்டில் உருவாக்குவார்கள். அது ஒன்றே அந்த நாட்டை அழிக்க போதுமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த கருத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; மனிதாபிமானம் வளர்ந்ததால் மருத்துவம் வளர்ந்தது மருத்துவத்தில் ஊழல்  என்றால் அது மனிதாபிமானத்தில் ஊழல் அன்றோ என்பார் ஜெயகாந்தன்.கல்வியின் ஊழல் சமூக கட்டுமானத்தை சிதைக்க கூடியது. சத்தான கருத்துக்கு நன்றி