வெடி விபத்து...மனித உயிர்களின் விலை சில லட்சங்கள்....-வைரமுத்து வேதனை !!!
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 19 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பட்டாசு ஆலை விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், பெருந்துயரம்மனித உயிர்களின் விலை சில லட்சங்கள் ஆகிப்போவது எனப் பதிவிட்டுள்ளார்.
சாத்தூர் அருகே அச்சங்குலத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்படுகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இத்தகவலறிந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்னை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 19 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 தனிப்படையினர் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
அதோடு, முதல்வர் பழனிசாமி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அளிக்குமாறு அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.அதேபோல் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத்தொகை அறிவித்தார்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்துப் பதிவிட்டுள்ளார்.
அதில், மனிதர்கள்
பட்டாசுகளை வெடிப்பதுபோய் -
பட்டாசுகள்
மனிதர்களை வெடிப்பது துயரமானது.
அதனினும் பெருந்துயரம்
மனித உயிர்களின் விலை