விஜய் சேதுபதியை யாரும் தாக்கி பேச வேண்டாம்!.. சீனு ராமசாமி ஆதரவு...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கூறிய கருத்து தவெக ஆதரவாளர்களையும், விஜய் ரசிகர்களையும் கோபப்படுத்தியிருக்கிறது. எனவே, விஜய் சேதுபதிக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் அவர்கள் களமாடி வருகிறார்கள். இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதியை விமர்சிக்க வேண்டாமென கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல. உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது. புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர். தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர். நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர். 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர். பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டிருக்கிறார்.