1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. seeman says about vijayalakshmi complaint

தேர்தல் நேரத்தில் எனது பணிகளை முடக்க வீண்பழி.. விஜயலட்சுமி விவகாரம் குறித்து சீமான்..!

Seeman
தேர்தல் நேரத்தில் எனது பணிகளை முடக்குவதற்காகவே விஜயலட்சுமி மூலம் என் மீது வீண் பழைய சுமத்தப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல்  ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் தன்னை கைவிட்டு விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 
 
இது குறித்து திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தபோது ’தேர்தல் நேரத்தில் எனது பணிகளை முடக்கும் வகையில் வீண்பழி சுமத்தப்படுகிறது என்றும் உரிய விசாரணை நடத்தி என் மீது தவறு இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் என் மிது சுமத்தப்பட்டிருகும்  குற்றச்சாட்டுகளை கண்டு நான் அஞ்சவில்லை என்றும் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
‘ஆதித்யா எல் 1' கவுண்டவுன் தொடங்கியது...