செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (12:48 IST)

‘ஆதித்யா எல் 1' கவுண்டவுன் தொடங்கியது...

AdityaL1
இஸ்ரோ  நிறுவனத்தின்  ‘ஆதித்யா எல் 1' விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கியது.

விண்வெளியில் இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல புதிய ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக  நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தன.

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1  என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ‘ஆதித்யா எல் 1 விண்கலத்தை’ சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 57 என்ற ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான 24 மணி  நேர கவுண்டவுன் இன்று தொடங்கியது.

அதன்படி  நாளைய தினம் காலை 11.50க்கு ‘ஆதித்யா எல் 1 ‘ விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.