திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (09:41 IST)

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு..!

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் இந்தியாவில் செயல்படுத்த உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி தலைமையில் இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்வு, ஒரே நாடு ஒரே கலாச்சாரம் உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
 
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்து அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தலும் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 
Edited by Siva